விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில், குடிநீர் வழங்கல் பணிகள் குறித்து அரசு அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் கண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோடை காலம் தொடங்கியுள்ளதால் குடிநீர் பற்றாக்குறையை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். விருதுநகர் மாவட்டத்திலுள்ள 7 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள் மற்றும் 11 ஒன்றியங்களில் குறிப்பிட்ட எந்தப் பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது. நாள்தோறும் மக்களின் தண்ணீர் தேவை எவ்வளவு, தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் செயல்படும் 6 திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர், "450 ஊராட்சிகளிலும் தண்ணீர் தட்டுப்பாடு கட்டுக்குள் உள்ளன. தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டம் 6, உள்ளூர் கூட்டுக்குடிநீர் திட்டம் 8 ஆகியவற்றின் மூலம் 7 நகராட்சிகள் 9 பே௫ராட்சிகள் ஆகியவற்றிற்கு போதுமான தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. நல்ல ஆலோசனைகளை நல்ல எண்ணத்துடன் யார் கூறினாலும் தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளும். இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் தவறு, சரி என கருத்துக் கூற தகுதியுண்டு" என்றார்.
இதையும் படிங்க: கரோனா பாதிக்கப்பட்டுள்ள பகுதி மாணவர்களுக்கு சிறப்புத் தேர்வு மையங்கள் அமைப்பு!