ETV Bharat / state

இளம் வாக்காளர்களின் வாக்குகளே முக்கியம் - வி.கே.சிங் - பாஜக தேர்தல் பணிக்குழு கூட்டத்தில் வி.கே.சிங் பேச்சு

விருதுநகர்: மத்திய அரசின் திட்டங்களை விளக்கி இளம் வாக்காளர்களிடமும், முதல்முறையாக வாக்களிப்பவர்களிடமும் வாக்குகளை பெற வேண்டும் என்று விருதுநகரில் மத்திய போக்குவரத்து துறை இணை அமைச்சர் வி.கே.சிங் பேசியுள்ளார்.

VK singh speech in BJP election meeting at Virudhunagar, Virudhunagar VK singh speech, BJP election meeting in virudhunagar, Virudhunagar Latest, Virudhunagar,  விருதுநகர் மாவட்டச்செய்திகள், விருதுநகர், பாஜக தேர்தல் பணிக்குழு கூட்டத்தில் வி.கே.சிங் பேச்சு, விருதுநகரில் பாஜக தேர்தல் பணிக்குழு கூட்டம்

author img

By

Published : Mar 8, 2021, 8:41 AM IST

விருதுநகரில் நேற்று (மார்ச் 7) பாஜக தேர்தல் பணிக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மத்திய போக்குவரத்து துறை இணை அமைச்சரும் முன்னாள் இராணுவ அலுவலருமான வி.கே.சிங் கலந்து கொண்டார். தேர்தல் பணிக்குழு கூட்டத்தில் பேசிய வி.கே. சிங், "இளம் வாக்காளர்களிடமும், முதல்முறையாக வாக்களிப்பவர்களிடமும் பாஜக அரசின் திட்டங்களை எடுத்துக்கூறி வாக்குகளை பெற வேண்டும். பாஜகவின் திட்டங்களை பொதுமக்களிடமும் விளக்க வேண்டும்.

கடந்த தேர்தலைவிட இந்தத் தேர்தலில் பாஜக சிறந்த வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ஆனால் நாம் வலிமையாக இல்லை. அடுத்த சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் நாம் போட்டியிட வேண்டும். அதற்கு நம்மை நாமே தயார்படுத்திக்கொள்வது அவசியம். இந்தத் தேர்தலில் திமுகவை தோற்கடிப்பதே நமது நோக்கம். நாம் கூட்டணி வைத்துள்ள அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும்.

அப்போதுதான் மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்த முடியும். இந்தத் தேர்தலில் பாஜக வேட்பாளர்களையும் அதிமுக வேட்பாளர்களையும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய கடுமையாக உழைக்க வேண்டும்" என்றார். விருதுநகரில் நடைபெற்ற தேர்தல் பணிக்குழு கூட்டத்தில் ஏராளமான பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 100 விழுக்காடு வாக்குப்பதிவு: விழிப்புணர்வு பேரணி நடத்திய மாணவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.