ஸ்ரீவில்லிபுத்தூரில் துணை கண்காணிப்பாளர் நமச்சிவாயம் தலைமையில், காவலர்கள் கொடி அணிவகுப்பு பேரணி நடத்தினர். இதில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த அணிவகுப்பு நகர் காவல் நிலையத்தில் தொடங்கி, நகரில் முக்கிய வீதிகளான மணிக்கூண்டு, பேருந்து நிலையம், ஆத்துக்கடைத் தெரு, ராமகிருஷ்ணாபுரம், சர்ச்பாயின்ட், வடக்குரத வீதி, தெற்குரத வீதி வழியாகச் சென்று, மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்துக்கு வந்தடைந்தனர்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவலர்கள் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 234 தொகுதிகளிலும் ஆன்மிக அரசியல்- அர்ஜுன் சம்பத்