இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், கரோனா வைரசைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மக்களுக்குத் தேவையான மருத்துவ தேவைகளை மருத்துவர்கள், செவிலியர், அவசர ஊர்தி ஊழியர்கள் இரவு பகல் பாராது பணியாற்றிவருகின்றனர்.
இந்நிலையில் முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவை விதி எண் 110இன் கீழ் மருத்துவர்கள், செவிலியர், சுகாதாரத் துறை பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியம் சிறப்பு ஊதியமாக வழங்கப்படும் என்று உத்தரவிட்டார். அதைப்போல அவசர ஊர்தி ஊழியர்களுக்கும் ஒரு மாத கால சிறப்பு ஊதியம் வழங்க வேண்டுமென தான் கேட்டுக்கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி, அவர்கள் போதியளவு கையுறை, முகக்கவசம் இல்லாமல் பணியாற்றிவருவதாகவும், எனவே அவர்களுக்கு உடனடியாகத் தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மருத்துவ உபகரணங்கள் வாங்க எம்.பி. நிதியிலிருந்து ரூ.1 கோடி வழங்கிய மாணிக்கம்தாகூர்!