விருதுநகர் அருகே உள்ள இனாம் ரெட்டியபட்டியைச் சேர்ந்தவர் ஜெயசூர்யா (18). இவர் சாத்தூரில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு பயின்றுவருகிறார். இவர் தனது அக்கா கணவர் வேளாங்கண்ணி (34) என்பவருடன் இனம் ரெட்டியாபட்டியிலிருந்து ஆர்.ஆர். நகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றபோது கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில் மருளுத்தூர் பிரிவில் பின்னால் வந்த கார் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தில் மோதியது.
இதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். மேலும் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் மற்றுமொரு இருசக்கர வாகனத்தில் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த ஆர்.ஆர். நகரைச் சேர்ந்த ஏசுதாஸ் (43) என்பவர் பலத்த காயமடைந்தார்.
தகவல் அறிந்து அங்கு சென்ற சூலக்கரை காவல் துறையினர் சம்பவ இடத்தில் உயிரிழந்த உடல்களை மீட்டு உடற்கூறாய்விற்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும், காயமடைந்த இயேசுதாஸ் என்பவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார். விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடிய கார் ஓட்டுநரை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: குமரியில் குளிக்கச் சென்ற இளைஞர் உயிரிழப்பு