74ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு விருதுநகர் அரசு பொது மருத்துவமனை, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் இணைந்து ரத்ததான முகாமை நடத்தினர். தவ்ஹீத் ஜமாத் தலைமை அலுவலகத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
காவல் துணை கண்காணிப்பாளர் மாரிராஜன் ரத்ததான முகாமை தொடங்கி வைத்தார். முகக்கவசங்கள் அணிந்து சமூக இடைவெளியுடன் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.
![virudhunagar Tamil Nadu Thowheed Jamath conducted blood donation camp](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-vnr-02-blood-donation-camp-vis-script-7204885_16082020150253_1608f_1597570373_881.png)
ரத்ததானம் வழங்குவதன் மூலம் உடலில் ஏற்படும் நன்மைகள் குறித்து காவல் துணை கண்காணிப்பாளர் பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கினார். இங்கு சேகரிக்கப்படும் ரத்த மாதிரிகள் முறையான கரோனா, ஏனைய பரிசோதனைக்கு பின்பு ரத்த வங்கியில் சேமிக்கப்படும் என மருத்துவக் குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ரத்தம் இன்றித் தவிக்கும் ஜிப்மர் மருத்துவமனை!