ETV Bharat / state

கூலித்தொழிலாளி தீ வைத்து தற்கொலை: விருதுநகரில் பரப்பரப்பு!

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே தீராத உடல்நலக்குறைவால் தீ வைத்து தற்கொலை செய்துகொண்ட கூலித்தொழிலாளியின் சாவில் இருக்கும் மர்மத்தை கண்டறிய காவல்துறை தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது.

கூலித்தொழிலாளி தீ வைத்து தற்கொலை: விருதுநகரில் பரப்பரப்பு!
author img

By

Published : May 26, 2019, 1:36 PM IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே எம்.டி.ஆர். நகர் நான்காவது தெருவில் வசித்துவருபவர் நாராயணன் (62). கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (50), மகன் பாலகிருஷ்ணன், மகள் பானுப்பிரியா.

அருப்புக்கோட்டையிலுள்ள 'இனிமை' என்னும் ஒரு உணவகத்தில் தோசை மாஸ்டராக பணிபுரிந்த வந்த நாராயணன் இன்று தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக்கொண்டார், அப்போது உடலில் தீ பற்றிய நிலையில் இவர் அலறிய சத்தத்தைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள்ளே முழு உடல் கருகியதால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்நிலையில் அப்பகுதி மக்கள் வேலைக்குச் சென்ற அவரது குடும்பத்தினருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அவரின் குடும்பத்தினர் தீயில் கருகிய அவர் உடலை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். பின் வந்த அருப்புக்கோட்டை காவல் துறையினர் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு உடற்கூறாய்விற்கு அனுப்பிவைத்தனர்.

இது குறித்து காவலர்கள் நடத்திய முதல்கட்ட விசாரணையில் அவர் குடும்பத்தினர் தெரிவித்ததாவது, தொடர் உடல்நலக் குறைவினால் சிகிச்சை பெற்றுவந்த நாரயணன், விரக்தியில் இருந்துள்ளார். இதனால் வீட்டில் தனியாக இருந்த அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என தெரிவித்தனர்.

அனைவரும் தெரிவித்த நாராயணனின் தற்கொலைக்கான காரணம் காவல் துறையினருக்கு திருப்தி அளிக்காததால், இந்த சாவில் இருக்கும் மர்மத்தை கண்டறிய வழக்குப்பதிவு செய்து, மேற்கொண்டு தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

விருதுநகர்
26-05-19

தீராத உடல்நலக்குறைவால் தீ வைத்து தற்கொலை செய்து கொண்ட கூலித்தொழிலாளி

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே எம்.டி.ஆர் நகர் 4வது தெருவில் குடும்பத்துடன் வசித்துவருபவர் நாராயணன் (62) கூலித்தொழிலாளியாக இருந்து வருகிறார். அவருக்கு லட்சுமி 50 என்ற மனைவியும், பாலகிருஷ்ணன் 27, பானுப்பிரியா 25 என்ற பிள்ளைகள் உள்ளனர்.  அருப்புக்கோட்டையிலுள்ள இனிமை ஹோட்டலில் தோசை மாஸ்டராக பணிபுரியும் நாகப்பன் மகன் நாராயணன் தனது வீட்டில் தனியாக இருந்தபோது  வீட்டு சந்தில் மண்ணெண்னை ஊற்றி தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை அறிந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் வேலைக்கு சென்ற அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உறவினர் மற்றும் அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் விசாரிக்க உடல்நலம்  சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்துள்ளார்  ஆனால் குணமாகவில்லை. தொடர் உடல்நல குறைவினால் விரக்தியில் இருந்து வந்ததாகவும் இதனால் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது குறித்து அருப்புக்கோட்டை காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

TN_VNR_1_26_HEALTH_ISSUE_SUICIDE_SCRIPT_7204885

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.