விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி ஹரிலட்சுமி. இவர் தனது சிறுவயது முதல் யோகாசனத்தில் ஆர்வமுடன் இருந்துள்ளார். பள்ளியில் சேர்ந்த நாள் முதல் யோகாசனம் செய்வதில் ஆர்வத்துடன் கலந்துகொண்டு பல யோகாசனங்களை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இவர் நடராஜா யோகாசன முத்திரையில் அதாவது ஒற்றைக்கால் தூக்கிக்கொண்டு யோகாசனம் செய்துள்ளார். இதில் உலக அளவில் குறிப்பாக இரண்டு நிமிடங்களுக்கு மேல் யாரும் சாதனை செய்யவில்லை. இந்த மாணவி மட்டுமே ஒற்றைக்கால் நடராஜ யோகாசன முத்திரையில் ஐந்து நிமிடம் யோகாசனம் செய்துள்ளார்.
இதனை பள்ளி ஆசிரியர்கள் நோபல் உலக ரெக்கார்டுக்காக வீடியோ எடுத்து அனுப்பி உள்ளனர். இதைத்தொடர்ந்து இன்று உலக நோபல் ரெக்கார்டர் மேனேஜிங் எடிட்டர் வினோத் நேரில் வந்து மாணவி ஒற்றைக்காலில் நின்று யோகாசனம் செய்வதை பார்வையிட்டு நோபல் உலக சாதனை ரெக்கார்டில் பதிவு செய்தார்.
இதுகுறித்து நோபல் வேர்ல்டு ரெக்கார்டர் மேனேஜர் வினோத் கூறும்போது, "இந்த மாணவியின் சாதனை வீடியோ எங்களுக்கு அனுப்பப்பட்டது. அதை பார்த்தோம். இன்று நேரில் வந்து இந்த மாணவி செய்யும் சாதனையை பார்வையிட்டோம். அவர் ஐந்து நிமிடம் ஒற்றைக்காலில் நடராஜ யோகாசன முத்திரையில் நின்று சாதனை செய்துள்ளார் . இது உலக சாதனைகளில் இடம்பெற்றுள்ளது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 24 மணி நேரம் ஆணி படுக்கையில் யோகாசனம் - கல்லூரி மாணவர் சாதனை