விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் சங்கம் மற்றும் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை செவிலியர் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் மகப்பேறு நிதி உதவித் திட்டத்தை எளிமையாக்க வேண்டும், வீடியோ காட்சி மூலம் எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்ய வேண்டும், முறையான விளக்கம் கேட்ட பின்பே ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊதிய முரண்பாடு சரி செய்ய வேண்டும், முறையான பதவி உயர்வு வழங்க வேண்டும் போன்ற பல்வேறு முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் இப்போராட்டத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்துகொண்டனர். தங்களது கோரிக்கைகளுக்கு முறையான நடவடிக்கை எடுக்காவிட்டால் மாநில அளவில் போராட்டம் நடைபெறும் என போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க : ராமர் கோயில் கட்ட மத்திய அரசு கொடுத்த நன்கொடை எவ்வளவு தெரியுமா?