ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடந்தால் அதிமுக கூட்டணி மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் - மாணிக்கம் தாகூர்

author img

By

Published : Nov 11, 2019, 11:12 PM IST

விருதுநகர்: உள்ளாட்சித்தேர்தல் உண்மையாகவும் நேர்மையாகவும் நடந்தால் அதிமுக கூட்டணி மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும் என்று விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

Manicka Tagore

சாத்தூர் ஒன்றியப் பகுதியான படந்தால், பெரியகொல்லபட்டி, சங்கரநத்தம், சூரங்குடி, பந்துவார்பட்டி உள்ளிட்ட ஊராட்சியில் விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆய்வு மேற்கொண்டார். கிராமப் பகுதியில் உள்ள கிராம மக்களிடம் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் குறித்தும், அதற்கான ஊதியம் குறித்தும் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உச்ச நீதிமன்றம் அயோத்தி வழக்கில் வழங்கிய தீர்ப்பை காங்கிரஸ் காரிய கமிட்டி வரவேற்றுள்ளது. இந்த தீா்ப்பின் மூலம் அனைவரும் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும். அயோத்தி தீர்ப்பை வைத்து அரசியல் செய்பவர்களை மக்கள் வீட்டிற்கு அனுப்ப வேண்டும்" என்றார்.

அயோத்தி தீர்ப்பை வைத்து அரசியல் செய்பவர்களை மக்கள் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் - மாணிக்கம் தாகூர்

உள்ளாட்சித் தேர்தல் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் கிராம பஞ்சாயத்துகள் வெகுவாக பாதிக்கபட்டுள்ளது. தற்போது நடைபெற்ற முடிந்த இடைத்தேர்தலில் அதிமுக பணம் மற்றும் அதிகாரத்தை வைத்து வெற்றி பெற்றுள்ளனர்.

அந்த தைரியத்தில் தான் உள்ளாட்சித் தோ்தலை நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். உண்மையாகவும் நோ்மையாகவும் உள்ளாட்சித் தோ்தல் நடந்தால் அதிமுக கூட்டணி மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கும். ஒரு தோ்தல் அலுவலர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு மறைந்த முன்னாள் தலைமை தோ்தல் அலுவலர் டி.என். சேஷன் தான் எடுத்துகாட்டு. அவா் யாருக்கும் அடிபணியாமல் நோ்மையாக தன்னுடைய தோ்தல் பணியை செய்தார். அதேபோல், தற்போது உள்ள தோ்தல் அலுவலர்கள் நோ்மையாக உள்ளாட்சித் தோ்தலை நடத்த வேண்டும்" என்றார்.

உண்மையாக உள்ளாட்சித் தேர்தல் நடந்தால் அதிமுக கூட்டணி மிகப்பெரிய தேல்வியைச் சந்திக்கும் - மாணிக்கம் தாகூர்

மேலும் பேசிய அவர், "காற்று மாசு என்பது உலக அளவில் இருக்கிற பிரச்னை. பட்டாசு வெடிப்பதைக் குற்றம் சொல்பவா்கள் டெல்லியில் நிறைய போ் இருக்கிறார்கள். இந்த ஆண்டு டெல்லியில் பட்டாசு வெடிக்காத நிலையில் இந்த அளவு காற்று மாசு ஏற்பட்டுள்ளதற்கு பல காரணங்கள் உள்ளன. காற்று மாசை தடுக்க அரசுடன் சேர்ந்து மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே காற்றுமாசடைவதைத் தடுக்க முடியும்" என்றார்.

காற்று மாசை தடுக்க அரசுடன் சேர்ந்து மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே காற்றுமாசடைவதை தடுக்க முடியும் - மாணிக்கம் தாகூர்

இதையும் படிங்க: ’இணைவதற்கு கடிதம் கொடுத்தால் தலைமை பரிசீலிக்கும்’ - புகழேந்திக்கு எடப்பாடி சிக்னல்!

Intro:விருதுநகர்
11-11-19

தற்போது உள்ள தோ்தல் அதிகாரிகள் மறைந்த முன்னாள் தலைமை தோ்தல் அதிகாரி டி.என்.சேஷன் போல் நோ்மையாக உள்ளாட்சி தோ்தலை நடத்த வேண்டும் என விருதுநகா் மாவட்டம் சாத்தூரில் விருதுநகா் பாராளுமன்ற உறுப்பினா் மாணிக்கம் தாகூா் பேட்டி..

Tn_vnr_06_manikam_thaqur_vis_byte_script_7204885Body:விருதுநகர் மாவட்டம் சாத்தூர் ஒன்றிய பகுதியான ஊராட்சிகளில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்தாகூர் ஆய்வு மேற்கொண்டார். சாத்தூர் ஒன்றிய பகுதியான படந்தால், பெரியகொல்லபட்டி, சங்கரநத்தம், சூரங்குடி, பந்துவார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஊராட்சியில் ஆய்வு மேற்கொண்டார். கிராம பகுதியில் உள்ள கிராம மக்களிடம் நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டம் பற்றியும், அதற்கான ஊதியம் பற்றியும் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விருதுநகா் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் உச்சநீதிமன்றம் அயோத்தியில் வழக்கில் வழங்கபட்ட தீர்ப்பை காங்கிரஸ் காரிய கமிட்டி வரவேற்று உள்ளது. எனவும் அது தான் என்னுடைய கருத்தும் என்றார். அதே போல் இந்த தீா்ப்பின் மூலம் அனைவரும் ஒற்றுமையாக சகோதரத்துவத்துடன் இருக்க வேண்டும் எனவும் அயோத்தி தீர்ப்பை வைத்து அரசியல் செய்பவர்களை மக்கள் வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றார். மேலும் உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லததால் கிராம பஞ்சாயத்துகள் வெகுவாக பாதிக்கபட்டுள்ளது. தற்போது நடைபெற்ற முடிந்த இடைதேர்தலில் அதிமுக பணம் மற்றும் அதிகாரத்தை வைத்து வெற்றி பெற்றுள்ளதை அடுத்து உள்ளாட்சி தோ்தலை நடத்துபோவதாக அறிவித்து உள்ளார்கள் எனவும் அப்போது உண்மையாகவும் நோ்மையாகவும் உள்ளாட்சி தோ்தல் நடந்தால் அதிமுக அணி மிக பெரிய தோல்வியை சந்திக்கும் என கூறினார். ஒரு தோ்தல் அதிகாரி எப்படி இருக்க வேண்டும் என என்பதற்க்கு மறைந்த முன்னாள் தலைமை தோ்தல் அதிகாரி டி.என்.சேஷன் தான் உலகமே எடுத்துகாட்டாக கூறுகின்றனா். அவா் யாருக்கும் அடிபணியாமல் நோ்மையாக தன்னுடைய தோ்தல் பணியை செய்தார். அதே போல் தற்போது உள்ள தோ்தல் அதிகாரிகள் மறைந்த முன்னாள் தலைமை தோ்தல் அதிகாரி டி.என்.சேஷன் போல் நோ்மையாக உள்ளாட்சி தோ்தலை நடத்த வேண்டும் என்றார். தமிழ்நாட்டில் தலைமையின் வெற்றிடம் என்பது எப்போதுமே இருந்தது இல்லை எனவும் அரசியலில் எப்பொழுதுமே வெற்றிடம் என்பது இல்லை என்று கூறிய எம்.பி.மாணிக்கம் தாகூா் பொன்.இராதாகிருஷ்ணன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடைந்ததால் மிகவும் பாதிக்கபட்டு இருக்கிறார். இப்படி பேசுபவா்கள் எல்லாம் தங்களை பத்திரிக்கைகளில் விளம்பரத்திற்காக பேசுகிறார்கள் எனவும் பாஜக வின் தமிழக தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் வருவார் என எதிர்பார்க்கும் நிலையில் டெல்லியில் உள்ள தலைவா்கள் இவரை இவரை ஒரு தலைவராக நியமிக்காமல் இருக்கிறார்கள் என கூறினார். மேலும் தமிழகத்துக்கு விரைவில் பாஜக ஒரு தலைவரை நியமிக்க வேண்டும் என்றார். காற்று மாசு என்பது உலக அளவில் இருக்கிற பிரச்சனை எனவும் பட்டாசு தொழிலை குற்றம் சொல்பவா்கள் டெல்லியில் அதிகம் போ் இருக்கிறார்கள் ஆனால் இந்த ஆண்டு டெல்லியில் பட்டாசு வெடிக்காத நிலையில் இந்த அளவு காசு மாசு ஏற்பட்டு உள்ளதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன எனவும் காற்று மாசை தடுக்க அரசுடன் சேர்ந்து மக்களும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே காற்றுமாசடைவதை தடுக்க முடியும் என்று மாணிக்தாகூர் கூறினார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.