மதுரை: மதுரை - சிலைமான் மற்றும் திருச்சி ரயில் நிலையங்களுக்கிடையே ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக, மதுரை - ராமேஸ்வரம் இடையிலான ரயில் போக்குவரத்து மற்றும் திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் ரயில் இயக்குவதில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே கோட்டம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரையிலிருந்து தினமும் காலை 6.50 மணிக்கு புறப்பட வேண்டிய மதுரை - ராமேஸ்வரம் ரயில் (06651) வருகின்ற 3 ஆம் தேதி காலை 08.05 மணிக்கும் (75 நிமிடங்கள் காலதாமதமாக), 4ஆம் தேதி காலை 08.10 மணிக்கும் (80 நிமிடங்கள் காலதாமதமாக) புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கும்பகோணம் - சீர்காழி நான்கு வழிச்சாலையால் என்ன பயன்? எப்போது பணி தொடங்கும்?
மற்றொரு மார்க்கத்தில் திருச்சி ரயில்வே கோட்டத்தில் ரயில் பாதை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதன் காரணமாக வருகின்ற அக்டோபர் 1ஆம் தேதி திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் எண் (20606) திருச்செந்தூரிலிருந்து இரவு 08.25 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக இரவு 10.35 மணிக்கு சுமார் 2.10 மணி நேரம் தாமதமாக புறப்படும் என மதுரை ரயில்வே கோட்டம் சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
புதிய மாற்றத்தை அறிந்து கொண்டு பயணிகள் தங்களது பயண நேரத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம், ரயில் பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்