விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய விருதுநகர் எம்.பி.மாணிக்கம் தாகூர், "தீப்பெட்டித் தொழிலுக்கான மூலப்பொருளை வழங்க பெட்ரோலியம் நிறுவனத்தை வலியுறுத்தினோம். தற்போது அந்த கோரிக்கை ஏற்கப்பட்டு போதிய அளவு மூலப்பொருள் வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி குறைந்துவருகிறது.
ஆனால், மத்திய அரசு இதனை ஏற்க மறுக்கிறது. நித்தியானந்தா உள்பட நாட்டில் உள்ள அனைத்து போலி சாமியார்களும் மோடியுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பில் இருக்கின்றனர். பொள்ளாச்சி சம்பவம் குறித்து ஜோதிமணி எம்.பி. கேட்டபோது அமைச்சர்கள் யாரும் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.
தொடர்ந்து பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. காவல்துறை மற்றும் நீதித்துறை இதுபோன்ற வழக்குகளில் கால தாமதம் செய்வதால் அதன் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைகிறது.
தமிழ்நாட்டில் முதலமைச்சர் பழனிசாமிக்கும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்திற்கும் தேர்தல் நடத்துவதில் விருப்பம் இல்லை. அவர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டில் எந்த தேர்தலும் நடைபெறாது" என்றார்.
இதையும் படிங்க: திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்கலாம் - உயர் நீதிமன்றம்