ETV Bharat / state

மோசடியில் ஈடுபட்ட பத்திரிக்கையாளர்கள்  - ஒருவர் கைது

விருதுநகர்: அரசு வேலை வாங்கித் தருவதாக மாத இதழின் பத்திரிக்கையாளர்கள் ரூ. 13 லட்சம் மோசடி செய்ததையடுத்து ஒருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

வேலை வாங்க தருவதாக மோசடி செய்த நபர்
வேலை வாங்க தருவதாக மோசடி செய்த நபர்
author img

By

Published : Mar 15, 2020, 5:54 AM IST

விருதுநகர் மாவட்டம் தேவதானம் பகுதியைச் சேர்ந்தவர்கள் வசந்த், அவரது நண்பர் பாண்டி. இவர்கள் மாத இதழில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர்கள் ராஜபாளையம் அருகே உள்ள எஸ். ராமலிங்காபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரிடம் வருவாய்த்துறை அலுவலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி நான்கு லட்சம் ரூபாய் வாங்கியுள்ளனர். இதையடுத்து நீண்ட நாள்கள் ஆகியும் சொன்னபடி வருவாய்த்துறையில் வேலை வாங்கித் தராததால் சுரேஷ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

வேலை வாங்க தருவதாக மோசடி செய்த நபர்

அதனடிப்படையில் காவலர்கள் வசந்த் என்பவரை கைது செய்து, அவரிடம் நடத்திய விசாரணையில் இதேபோன்று மேலும் ஐந்து பேரிடம் ரூ. ஒன்பது லட்சம் மோசடி செய்தது தெரியவந்தது.

பின்னர் வசந்திடம் இருந்து காவல் துறையினர் மொத்தமாக 13 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். மேலும் அவரது நண்பர் பாண்டி என்பவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: அமெரிக்கா டாக்டர் எனக் கூறி பெண்களிடம் மோசடி செய்த நபர் குண்டர் சட்டத்தில் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.