விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே காக்கிவாடான்பட்டியில் பட்டாசு ஆலை உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று அறைகள் தரைமட்டமாகின.
இந்த விபத்தில் குருசாமி (37) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடனடியாக, அக்கம்பக்கத்தினர் வந்து படுகாயத்துடன் இருந்த சின்ன முனியாண்டி (35) என்பவரை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இத்தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு பட்டாசு ஆலையில் ஏற்பட்டிருந்த தீயைக் கட்டுப்படுத்தினர்.
ஏற்கெனவே விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பிப்ரவரி 19ஆம் தேதி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சின்னக்காமன்பட்டி பட்டாசு ஆலை வெடி விபத்து - பலி எண்ணிக்கை அதிகரிப்பு