விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் பகுதியில், தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலுக்கு இன்னும் மூன்று தினங்களே உள்ள நிலையில், ராஜபாளையம் நகர் மற்றும் கிராம பகுதி உள்ளிட்ட இடங்களில், சிறு தெருக்கள், குறுகிய சாலை போன்ற பகுதிகளில் பறக்கும் படை அலுவலர்கள், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக இராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் வந்த டெம்போ டிராவல் வேனில் சோதனை செய்தபோது, மலையடி பட்டியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் உரிய ஆவணம் இன்றி கொண்டு வந்த ரூ.1,04,600 பணத்தினை பறிமுதல் செய்தனர். அப்பணத்தினை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர் கல்யாண்குமாரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: சுங்கத் துறையின் 'நீலக் கழுகு' சோதனை: ரூ.50 லட்சம் பறிமுதல்!