தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவிவரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் கரோனா தொற்றைத் தடுக்க பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்க உத்தரவிட்டார். அதனால், தமிழ்நாடு முழுவதும் திமுக கட்சியினர், பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கிவருகின்றனர்.
விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர்
இந்நிலையில், விருதுநகர் நகர திமுக சார்பில் விருதுநகர் சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.ஆர்.ஆர். சீனிவாசன், விருதுநகர் உழவர்சந்தை அருகே பொதுமக்களுக்கு கரோனா தொற்றைத் தடுக்கும் வகையில் கபசுரக் குடிநீர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியை பொதுக்குழு உறுப்பினர் மதியழகன் ஏற்பாடு செய்திருந்தார். மேலும், இந்நிகழ்ச்சியில் நகரச் செயலாளர் எஸ்.ஆர்.எஸ். தனபாலன், பொருளாளர் நேசனல் ராமர், அவைத்தலைவர் காசிராஜன், மாவட்ட இளைஞரணித் தலைவர் கிருஷ்ணகுமார், கழக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் அனைவரும் முகக்கவசம் அணிந்து, தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து கபசுரக்குடிநீர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.