விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சிக்குள்பட்ட 42 வார்டுகளிலும் பாதாளசாக்கடை திட்டம், தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம், கட்டி முடிக்கப்படாத ரயில்வே மேம்பாலம், பல்வேறு பகுதிகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவராமல் மூடப்படாமல் விபத்து ஏற்பட்டுவருவதால் அதை சீரமைக்க வலியுறுத்தி திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டமானது மாவட்ட செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் மற்றும் ராஜபாளையம் எம்.எல்.ஏ. தங்கபாண்டியன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு, உள்ளாட்சி நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினர் தனுஷ்குமார், கட்சி நிர்வாகிகள், திமுக உறுப்பினர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: