ETV Bharat / state

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஏலம் விடப்படும் என ஒட்டப்பட்ட நோட்டீஸால் பரபரப்பு - உயர்நீதிமன்ற மதுரை கிளை

விருதுநகரில் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தகாரருக்கு நீதிமன்ற உத்தரவுப்படி 2 கோடியே 35 லட்சம் இழப்பீடு வழங்காததால் வரும் 31-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை ஏலம் விடப்படுவதாக ஒட்டப்பட்ட நோட்டீஸால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஏலம் விடப்படும் என ஒட்டப்பட்ட நோட்டீஸால் பரபரப்பு

author img

By

Published : Mar 22, 2023, 9:14 PM IST

Updated : Mar 22, 2023, 10:41 PM IST

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஏலம் விடப்படும் என ஒட்டப்பட்ட நோட்டீஸால் பரபரப்பு

விருதுநகர்: மதுரை அருகே அரசரடி பகுதியைச் சேர்ந்தவர், சபரிமுத்து. இவர் கடந்த 1998ஆம் ஆண்டு திருமங்கலம் முதல் சாத்தூர் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை பணிகளை டெண்டர் மூலம் ஒப்பந்தம் செய்து பணிகள் மேற்கொண்டு வந்துள்ளார். இந்த நிலையில் சபரிமுத்து 30% சாலை பணிகளை முடித்த நிலையில், ஒப்பந்தத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் வேறு ஒருவருக்கு பணிகளை வழங்கியதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கடந்த 2005ஆம் ஆண்டு இந்த டெண்டர் விவகாரம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் சபரிமுத்து நெடுஞ்சாலைத்துறை மீது வழக்கு தொடர்ந்தார். இந்த நிலையில் கடந்த 2007ஆம் ஆண்டு நீதிமன்றம் ஒப்பந்தக்காரர் சபரிமுத்துவுக்கு 68 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், சபரிமுத்துவுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கப்படாத காரணத்தால் மீண்டும் நீதிமன்றத்தை அணுகினார். இந்த நிலையில் கடந்த 18/08/2022 அன்று சபரிமுத்துக்கு 2 கோடியே 35 லட்சத்து 2 ஆயிரத்து 208 ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

ஆனால், நீதிமன்ற உத்தரவுப்படி ஒப்பந்ததாரர் சபரிமுத்துவுக்கு தற்போது வரை மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை. இந்த காரணத்தால் இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களை வரும் 31ஆம் தேதி ஏலம் விடப்படும் என்ற அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நீதிமன்ற ஊழியர்கள் ஒட்டினார்கள். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் - பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

Last Updated : Mar 22, 2023, 10:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.