கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியத் தேவையின்றி மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும் தடையை மீறி வெளியே வருவோர் மீது காவல் துறையினர் அபராதம் விதிப்பதும், வழக்குப்பதிவு, தோப்புக்கரணம் போட வைப்பது, விழிப்புணர்வு காணொலி பார்க்க வைப்பது என அனைத்து விதமான முயற்சிகளிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பேருந்து நிறுத்தம் அருகில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுவந்தனர். அப்போது, 144 தடை உத்தரவை மீறி இரு சக்கர வாகனம், கார்களில் பயணிப்போரை கரோனா விழிப்புணர்வுக்காக வரையப்பட்ட ஓவியத்தின் மீது அமரவைத்து நூதன தண்டனையைக் காவல் துறையினர் வழங்கினர்.
சுமார் அரை மணி நேரம் அமர வைக்கப்பட்டது மட்டுமின்றி கரோனா தொற்றால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அவர்களுக்கு எடுத்துரைத்தனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: ஊரடங்கை மதிக்காமல் கிரிக்கெட் விளையாடிய பயிற்சி மருத்துவர்கள்