விருதுநகர் மாவட்டத்தில் கரோனா நோய்த்தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஏற்கனவே 10 ஆயிரத்து 848 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ள நிலையில் இன்று (ஆக.14) மேலும் 90 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
இதையடுத்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 938 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இதுவரை 9 ஆயிரத்து 492 பேர் நோய் பாதிப்பிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 1,300 பேர் விருதுநகர், அருப்புக்கோட்டை, சாத்தூர், சிவகாசி, ராஜபாளையம் ஆகிய பகுதியில் உள்ள சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில்,இன்று (ஆக.14) மேலும் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 146 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.