ETV Bharat / state

ஈ.டிவி பாரத் செய்தி எதிரொலி: விருதுநகர் மக்களவை உறுப்பினர் பிரதமருக்கு கடிதம்!

விருதுநகர்: ஊரடங்கு உத்தரவால் வேலை இழந்துள்ள தீப்பெட்டி, பட்டாசுத் தொழிலாளர்களுக்கு ரூபாய் 7,500 ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என, பிரதமர் மோடிக்கு விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கடிதம் எழுதியுள்ளார்.

manikam tagore
manikam tagore
author img

By

Published : Apr 11, 2020, 10:12 AM IST

கடந்த 6ஆம் தேதி, நமது ஈடிவி பாரத்தில் ஊரடங்கு உத்தரவின் காரணமாக, பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கும் சூழ்நிலையையும், பட்டாசு தொழிலாளர்கள் மத்திய, மாநில அரசிடம் வைக்கும் கோரிக்கையையும் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது.

இதன் எதிரொலியாக, விருதுநகர் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஊரடங்கு உத்தரவால் வேலை இழந்துள்ள தீப்பெட்டி, பட்டாசு தொழிலாளர்களுக்கு 7,500 ரூபாய் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என, பிரதமர் மோடிக்கும், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்வார்க்கும் கடிதம் எழுதியுள்ளார்.

விருதுநகர் மக்களவை உறுப்பினர்

அவர் எழுதியுள்ள கடிதத்தில், "கரோனா வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் நாட்டிலுள்ள அனைத்துத் தொழில்களும் முடங்கியுள்ளன. இதில், சிவகாசி பட்டாசுத் தொழிலும் விதிவிலக்கல்ல. விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளிலும், சுமார் 1,100 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன.

இந்தத் தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். தற்போது ஊரடங்கு உத்தரவு காரணமாக பட்டாசுத் தொழில் முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. வாரக்கூலிகளாகவும், தினக்கூலிகளாகவும் பட்டாசு ஆலைகளில் பணியாற்றி வந்த லட்சக் கணக்கான தொழிலாளர்கள், வருமானம் இல்லாமல் தவித்துவருகின்றனர். தமிழ்நாடு அரசு வழங்கும் 1000 ரூபாய் நிவாரணத் தொகை குடும்பச் செலவுக்குப் போதவில்லை.

ஊரடங்கு உத்தரவு மற்றும் தொழில் முடக்கம் காரணமாக, அவர்களது வாழ்வாதாரமும் முடங்கிப் போய் உள்ளதால் மத்திய மாநில அரசுகளின் உதவியை நாடி பட்டாசு தொழிலாளர்கள் இருந்துவருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால் வேலையிழந்துள்ள தீப்பெட்டி, பட்டாசு தொழிலாளர்களுக்கு ரூபாய் 7,500 ரூபாய் ஊக்க ஊதியம் வழங்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: ஊரடங்கை நீட்டிக்க மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.