ETV Bharat / state

பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி., நடைபயணம்! - காங்கிரஸ்

விருதுநகரில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நடைபயணம் நடைபெற்றது. இந்த நடைபயணத்தில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமை தாங்கினார்.

Congress
Congress
author img

By

Published : Nov 23, 2021, 7:06 PM IST

விருதுநகர் : விருதுநகரில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து நடைபயணம் நடைபெற்றது. இந்த நடை பயணத்துக்கு விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமை தாங்கினார்.

மேலும் இந்த நடைபயணத்தில் சிவகாசி சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் தொண்டர்கள் என 1000க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இந்த நடைபயணம் எம்.ஜி.ஆர் சிலையில் தொடங்கி நகரின் முக்கிய வீதிகளில் வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் முடிவடைந்தது.

மாணிக்கம் தாகூர் பேட்டி

இந்ந நடை பயணத்தின் போது காங்கிரஸ் கட்சி சார்பில் பாஜக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் குறித்த துண்டு பிரசுரம் பொதுமக்களுக்கு வழங்கினார்கள். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், “அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் உத்தரவின்பேரில் விருதுநகரில் காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாதயாத்திரை நடைபெற்றது. பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து இந்த பாதயாத்திரை நடைபெற்றது.

எய்ம்ஸ் மருத்துவமனை வர வேண்டும் என நீண்ட கால கோரிக்கையை அடுத்து 2015இல் அறிவிப்பாக வந்ததது. பின்னர் 2019இல் பிரதமர் தோப்பூரில் அடிக்கல் நாட்டினார். ஆனால் தற்போது வரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் நடைபெறவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகளை உடனடியாக தொடங்க நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் தமிழ்நாடு எம்.பிக்கள் அனைவரும் குரல் கொடுப்போம்.

பிரதமரிடம் அண்ணாமலை கேட்பாரா?

அதே சமயம் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் இந்த ஆண்டு சேர்க்கை நடைபெறாது எனவும் அடுத்த ஆண்டு தான் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வாய்ப்பு உள்ளது. பெட்ரோல், டீசல் மீது மத்திய அரசு கொண்டு வந்து உள்ள வரியை குறைக்க நிதி அமைச்சரிடமும் பிரதமர் மோடியிடமும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சொல்வாரா?

அண்ணா மலையை பொறுத்தமட்டில் உண்மையிலேயே தமிழ் மக்கள் மீது அன்பு இருந்தால் பிரதமர் மோடியிடம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தவாறு பெட்ரோல் மீது இருந்த வரியை கொண்டு வர வேண்டும் எனவும் 1 லிட்டர் பெட்ரோலுக்கு 32 ரூபாய் வரி விதிப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை எனவும் கேட்க வேண்டும்.

தமிழ்நாட்டில் முடியாது

மற்ற மாநிலங்களில் உள்ள மக்களை போல் தமிழ்நாடு மக்களை முட்டாளாக்க பாஜக நினைத்தால் அது நடைபெறாது, அரசு நிகழ்ச்சிகளில் எதிர்கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்வது நல்ல முடிவாக பார்க்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிலையங்களில் பெண் குழந்தைகளின் பிரச்சினைகளை கேட்பதற்கு யாரும் இல்லாத காரணத்தால் தான் குழந்தைகள் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள்.

குழந்தைகளின் பிரச்சினைகளை பெற்றோர் கேட்க வேண்டும். இப்போது நம்முடைய சமூகத்தில் குடும்பத்தினர் வெளியே பேசும் பழக்கம் மிகவும் குறைந்துவிட்டது. ஆந்திராவில் எதிர்க்கட்சித் தலைவரின் மனைவியை பற்றி விமர்சனம் செய்தது மிகவும் கீழ்த்தரமானது. எந்தப் பெண்ணைப் பற்றியும் சட்டப்பேரவையில் பேசுவதற்கு அனுமதிக்கக்கூடாது. ஜெகன்மோகன் ரெட்டி இந்த மாதிரி நடந்து கொள்வது மிகவும் கவலைக்குரிய விஷயமாக இருக்கிறது.

மத்திய அரசு பாரப்பட்சம்

பருவமழையின் வெள்ள சேதங்களை பார்வையிட வந்த மத்திய குழுவினரை தமிழ்நாடு அலுவலர்கள் சரியான இடத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். மத்திய அரசு பாரப்பட்சமாக நடக்கிறது. ஏனெனில், வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய அமைச்சர் யாரும் வரவில்லை.

பாஜக அரசுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி., நடைபயணம்!

தமிழர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் சென்னை மற்றும் கடலூரில் வெள்ள சேதங்களை பார்வையிட வராது மோடி அரசு ஒருதலைப்பட்சமாக நடந்து கொள்வதை காட்டுகிறது.

பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும்

மத்திய குழுவினர் நேர்மையான முறையில் ஆய்வு செய்து உரிய நிவாரணத்தை தமிழ்நாடு அரசுக்கு பெற்றுத் தர வேண்டும். பாஜகவை பொருத்தமட்டில் மக்கள் விரோதிகளாக தொடர்ந்து சித்தரிப்பதற்கு அவர்களின் நடவடிக்கை தான் காட்டுகிறது.

மேலும் பாஜகவை பொருத்தமட்டில் மக்களுக்குப் பிடிக்காத விஷயங்களையும் மக்களை முட்டாளாக்கும் நினைப்பது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம், அதை பாஜக நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க : Farm Laws: 'போராடிய விவசாயிகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்து' - கே.எஸ். அழகிரி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.