விருதுநகர் மாவட்ட ஆட்சியராக நேற்று (ஜூன்.17) பொறுப்பேற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி, இன்று (ஜூன்.18) விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சங்குமணியிடம் கரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, உணவுப் பொருள்கள் குறித்து அவர் கேட்டறிந்தார்.
மேலும் இருப்பில் உள்ள மருந்துப் பொருள்கள், மருத்துவமனைகளுக்கான தேவைகள் உள்ளிட்டவை குறித்தும் அவர் கேட்டறிந்தார்.