ETV Bharat / state

சாத்தூரில் பஞ்சாயத்து தலைவரை மாற்ற வலியுறுத்தி கிராம மக்கள் தர்ணா! - sattur vilage people protest against president

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெற்றிலையூரணி கிராம பஞ்சாயத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருவதாக கூறி கிராம மக்கள் பஞ்சாயத்து அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

சாத்தூரில் பஞ்சாயத்து தலைவரை மாற்ற வலியுறுத்தி கிராம மக்கள் தர்ணா போராட்டம்!

author img

By

Published : May 3, 2022, 12:54 PM IST

விருதுநகர்:மே தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் மே 1 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது இந்நிலையில் சாத்தூர் வெற்றிலை ஊரணியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்ற வரவு செலவு கணக்கு விவரங்களை பஞ்சாயத்துச் செயலாளர் செந்தில் முறையாக ஒப்படைக்கவில்லை என கிராம மக்கள் குற்றம்சாட்டினர்.

அதற்குப் பஞ்சாயத்துத் தலைவர் சுந்தரவல்லி ஒத்துப் போவதாகவும் பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் செயலாளர் இருவரையும் கண்டித்து பொதுமக்கள் கூச்சலிட்டதால் நேற்று கிராம சபைக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து கிராம சபைக் கூட்டம் நடைபெற வேண்டும் என வெற்றிலையுரணி கிராம மக்கள் பஞ்சாயத்து அலுவலகம் முன்பு அமர்ந்தனர்.

ஆனால் பஞ்சாயத்துத் தலைவர் மற்றும் செயலாளர் இருவரும் கிராம சபைக் கூட்டத்தினை புறக்கணித்து வராததால் கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் சாகுல் ஹமீது பொதுமக்களிடையே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

கடந்த 2 ஆண்டுகளாக சாலை, வாறுகால், தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்றும் சரியான முறையில் பஞ்சாயத்து வரவு செலவு கணக்குகளை ஒப்படைக்கவில்லை என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பஞ்சாயத்து செயலாளரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் பஞ்சாயத்துச் செயலாளருக்கு ஒத்துப்போகும் பஞ்சாயத்துத் தலைவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.இதனையடுத்து சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜ் பொதுமக்களுடைய பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

இதையும் படிங்க:திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் - 13 மணி நேரம் தொடர்ந்து எழுதி உலக சாதனை

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.