திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே புத்தூரைச் சேர்ந்த ஐந்து பேர் ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது தண்ணீர் பந்தம்பட்டி அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோரம் கவிழ்ந்தது. இதில் புத்தூரைச் சேர்ந்த முதியவர் சித்திரை சேகர் பலத்த காயமடைந்தார்.
அப்போது வடமதுரை நோக்கி சென்று கொண்டிருந்த வேடசந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் மருத்துவர் பரமசிவம், ரத்த காயங்களுடன் முதியவர் இருந்ததை பார்த்து வாகனத்தை நிறுத்தினர். உடனடியாக அவருக்கு முதலுதவி செய்து பத்திரமாக மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இதனிடையே அவரது செயலை பார்த்த அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர். அதற்கு, முதலில் நான் மருத்துவர், பின்பு தான் சட்டப்பேரவை உறுப்பினர் எனவும் ஒரு மருத்துவராக இது எனது கடமை என்றும் கூறினார்.
இதையும் படிங்க..அபாய கட்டத்தை நெருங்கும் காற்று மாசு: டெல்லி அரசு எடுத்துள்ள அதிரடி திட்டம்!