அருப்புக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் மூன்றாவது முறையாக போட்டியிடுகிறார். இதையொட்டி, கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் முருகேசனிடம் அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய வைகைச்செல்வன், “வீட்டுக்கு ஒரு வாஷிங் மிஷின், குடும்பத் தலைவிகளுக்கு 1,500 ரூபாய் ஊக்கத்தொகை, முதியோர் பென்ஷன் உயர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கான பென்ஷன் உயர்வு, குடும்பத்திற்கு ஆறு சிலிண்டர்கள் இலவசம் என்ற அதிமுகவின் தேர்தல் அறிக்கைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
ஏற்கனவே இரண்டு ஏக்கர் நிலம் தருவேன் என்ற திமுக, அதனை நிறைவேற்றாமல் காற்றில் பறக்கவிட்டது. ஆனால், பொங்கல் பரிசாக அனைவருக்கும் 2,500 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்த அதிமுக அரசு, அதை அனைவருக்கும் வழங்கி, சொன்னதைச் செய்யும் அரசாக உள்ளது” என்றார்.