தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க 144 தடை உத்தரவை அரசு அமல்படுத்தி உள்ளது. இதனால் அத்தியவாசிய பொருட்கள் வாங்க மட்டும் பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதிலும் அத்தியவாசிய பொருட்கள் வாங்க ஒரு நபர் மட்டுமே வர வேண்டும் எனவும் காவல் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் போக்குவரத்து காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது குறிஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்த இளம் தம்பதியினர் 144 தடை உத்தரவை மீறி இருசக்கர வாகனத்தில் வந்தனர்.
அப்போது அவர்களைக் காவல் துறையினர் தடுத்து நிறுத்தியதால், ஆத்திரம் அடைந்த இளம் தம்பதியினர் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சேலத்தில் குணமடைந்து வீடு திரும்பிய கரோனா நோயாளிகள்!