ETV Bharat / state

துப்பாக்கிய கொஞ்சம் பாத்துக்கோ..! - ஆபத்தில் சிக்கிய அசால்ட் போலீசார் - போலீஸ் துப்பாக்கி

போலீஸ் துப்பாக்கியுடன் புகைப்படம் எடுத்து சமுகவலைதளத்தில் பரப்பிய நபரால் காவலர்கள் இருவர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

துப்பாக்கியுடன் செல்பி காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

author img

By

Published : May 13, 2022, 7:07 PM IST

Updated : May 13, 2022, 7:12 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள இருக்கன்குடி காவல் நிலையத்தில் அன்பரசன் என்பவர் இரண்டாம் நிலை காவலராகவும் ஆறுமுகவேல் என்பவர் தலைமைக் காவலராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் கடந்த மாதத்தில் நாருகாபுரம் கிராமத்தில் மர்மமான முறையில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் ஜான்பாண்டியனை விருதுநகர் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது காவலர்கள் இருவரும் இருக்கன்குடியைச் சேர்ந்த மாடேஸ்வரன் என்பவரிடம் கையில் இருந்த துப்பாக்கியை பார்த்துக்கொள்ளுமாறு கூறிவிட்டு டீ குடிக்க சென்றுள்ளனர்.

இந்த நேரத்தில் மாடேஸ்வரன் கையிலிருந்த துப்பாக்கியுடன் கெத்தாக புகைப்படம் எடுத்து தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக பதிவேற்றம் செய்துள்ளார். துப்பாக்கியுடன் பதிவேற்றம் செய்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவிய தகவல் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகருக்கு தெரியவந்துள்ளது.

அவர் இது தொடர்பாக கவனக்குறைவாக பணியில் ஈடுபட்ட அன்பரசன் மற்றும் ஆறுமுகவேல் இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க : ஆட்டோ ரேஸ் நடத்திய மெக்கானிக்குகள் - போலீஸ் தீவிர விசாரணை

Last Updated : May 13, 2022, 7:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.