உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவிவருகிறது. இதற்கான முன்னெச்சரிக்கையை மத்திய அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இந்தப் பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.
இதனால் மக்கள் நடமாட்டமின்றி வீதிகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. இந்த சூழலில் ஆங்காங்கே வனவிலங்குகள் ஊருக்குள் வரத் தொடங்கியுள்ளன. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மான்கள் கிருஷ்ணன் கோவில் பகுதி சாலைக்குள் வந்தன. அப்போது அந்த வழியாக வந்த வாகனம் மோதியதில் 2 மான்கள் உயிரிழந்தன.
அதே போல் குன்னூர் பகுதியில் ஊருக்குள் வந்த மானை அங்கிருந்த தெருநாய்கள் துரத்திச் சென்று கடித்தன. இதில் மான் உயிரிழந்தது. உயிரழந்த 3 மான்களை மீட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினர் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.