ETV Bharat / state

தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது! - serial

விருதுநகர்: அருப்புக்கோட்டை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் கொள்ளை, வழிபறி சம்பவங்களில் ஈடுபட்டு வந்த பாலசங்கர், ரமேஷ் ஆகிய இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Two arrested for serial robbery
author img

By

Published : Jul 16, 2019, 10:23 PM IST

அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம், தனியாக இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர்களை குறிவைத்து வழிப்பறி சம்பவங்களும் நடைபெற்றன.

இது குறித்து அருப்புக்கோட்டை மற்றும் பல்வேறு ஊர்களில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில் அருப்புக்கோட்டை காந்தி நகரில் வாகனச்சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் விசாரித்தனர். முன்னுக்குபின் முரணாக பதில் கூறிய அவர்கள் தப்பி ஓட முயற்சித்தனர். அவர்களை மடக்கிப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது

விசாரணைக்காக அழைத்து சென்றவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தை சார்ந்த பாலசங்கர் மற்றும் ரமேஷ் என தெரியவந்தது. விசாரணையில் பல்வேறு மாவட்டங்களில் வீட்டின் பூட்டை உடைத்து திருடியதை ஒப்புக்கொண்டனர். இவர்களை கைது செய்த காவல்துறையினர், 90 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும், இவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Intro:விருதுநகர்
16-07-19

விருதுநகரில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 2 கைது Body:விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்ததோடு வழிபறியிலும் ஈடுபட்ட தொடர் கொள்ளையர்கள் பாலசங்கர் மற்றும் ரமேஷ்(எ) ராமையா என்ற இருவர் தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பகல் நேரங்களில் மட்டும் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யப்பட்டனர் அருப்புக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீபகாலமாக பகல்நேரங்களில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டன மேலும் தனியாக இருசக்கர வாகனத்தில் செல்லும் நபர்களை குறிவைத்து வழிப்பறி சம்பவங்களும் நடைபெற்றன. இது குறித்து அருப்புக்கோட்டை மற்றும் பல்வேறு ஊர்களில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விருதுநகர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜராஜன் அவர்களின் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் மகேஸ்வரன் தலைமையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடிவந்தனர். இந்நிலையில் அருப்புக்கோட்டை காந்தி நகரில் வாகனச்சோதனையில் ஈடுபட்ட காவல்துறையினர் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் விசாரித்தனர் முன்னுக்குபின் முரணாக பதில் கூறிய அவர்கள் தப்பி ஓட முயற்ச்சித்தனர் அவர்களை மடக்கி பிடித்த போலீஸார் காவல் நிலையம் அழைத்து சென்றனர். விசாரணைக்காக அழைத்து சென்றவர்கள் திருநெல்வேலி மாவட்டைத்தை சார்ந்த பாலசங்கர்(37) மற்றும் ரமேஷ் (எ) ராமையா (36) என தெரியவந்தது. அவர்களிடம் விசாரணை நடத்தியதில் கிருஷ்ணன் கோவில் திருவிருந்தாள் புரம் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் வீட்டின் பூட்டை உடைத்து திருடியதை ஒப்புக்கொண்டனர் இவர்கள் பகல் நேரங்களில் வீட்டில் அனைவரும் வேலைக்கு செல்லும் நேரம் பார்த்து கடப்பாறையை கொண்டு வீட்டின் கதவு மற்றும் பீரோவை உடைத்து நகை மற்றும் பணத்தை திருடியதும் தனியாக செல்லும் நபர்களை குறிவைத்து வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட குற்றவாளிகளிடம் இருந்து 90 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்த காவல்துறையினர் குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு கொண்டு சென்றனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.