ETV Bharat / state

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திருநங்கை

விருதுநகா்: சின்ன பேராளி கிராமத்தைச் சேர்ந்த 65 வயது திருநங்கை ஒருவர் ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

Transgender, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திருநங்கை
Transgender, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திருநங்கை
author img

By

Published : Dec 18, 2019, 4:42 PM IST

சமூகத்தில் பல்வேறு இடங்களிலும் திருநங்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டுவரும் சூழ்நிலையில் 65 வயது நிரம்பிய திருநங்கை ஒருவர் கிராம மக்களின் வற்புறுத்தலால் நடக்க இருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

விருதுநகர் அருகே சின்ன பேராளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி என்ற அழகு பட்டாணி(65). திருநங்கையான இவர் சிறுவயது முதலே விவசாய கூலி தொழிலாளியாக வாழ்க்கையை நடத்திவருகிறார். இந்த வேலையின் மூலம் தனக்கு கிடைக்கும் பணத்தையும் பிறருக்காக உதவி செய்ய பயன்படுத்தும் குணமுடையவராக உள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திருநங்கை

இவ்வாறு தன்னலமற்று இருக்கும் இவருடைய குணம் அறிந்த கிராம மக்கள் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சித் தலைவர் பதவிக்கு அழகு பட்டாணி போட்டியிட வேண்டும் என வற்புறுத்தியுள்ளனர்.

ஊர் மக்களின் வற்புறுத்தலின் பேரில் அழகு பட்டாணி ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனுவையும் தாக்கல் செய்துள்ளார். பொது மக்களின் ஆதரவு உள்ளதால் வெற்றி நிச்சயம் என அவர் நம்பிக்கையுடன் உள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்று மக்களின் அடிப்படை தேவைகளான சாலை, மின்சாரம், குடிநீர், கழிவுநீர் பிரச்னை உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளையும் அழகு பட்டாணி நிறைவேற்றித் தருவார் என கிராம மக்கள் நம்பிக்கையோடு தெரிவிக்கின்றனர்.

Intro:விருதுநகா்
18-12-19

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டுள்ள விவசாய திருநங்கை

Tn_vnr_01_transgender_nominee_vis_script_7204885Body:சமூகத்தில் பல இடங்களில் திருநங்கைகள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் 65 வயது நிரம்பிய விவசாயியான திருநங்கை ஒருவர் கிராம மக்களின் வற்புறுத்தலால் வரும் உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.

விருதுநகர் அருகே சின்ன பேராளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி என்ற அழகு பட்டாணி திருநங்கையான இவருக்கு தற்போது வயது 65. சிறுவயது முதலே விவசாய கூலி தொழிலாளியாக வாழ்க்கையை நடத்தி வரும் இவர். விவசாயக் கூலியாக கிடைக்கும் பணத்தைக் கூட பிறருக்காக உதவி செய்ய பயன்படுத்தும் குணமுடையவர். தன்னலமற்று இருக்கும் இவருடைய குணம் அறிந்த கிராம மக்கள் வருகிற உள்ளாட்சித் தேர்தலுக்கு ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட வேண்டும் என வற்புறுத்தி உள்ளனர். ஊர் பொது மக்களின் அன்பான வற்புறுத் வெளியேற்ற அழகு பட்டாணி ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளார். ஊர் பொது மக்களின் ஆதரவு உள்ளதால் வெற்றி நிச்சயம் என நம்பிக்கையுடன் உள்ளார். உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று மக்களின் அடிப்படை தேவைகளான சாலை மின்சாரம் குடிநீர் கழிவுநீர் உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளை அழகு பட்டாணி நிறைவேற்றித் தருவார் என கிராம மக்கள் நம்பிக்கையோடு தெரிவிக்கின்றனர்.
திருநங்கைகள் சமூகத்தில் பல இடங்களில் புறக்கணிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில் கிராம மக்களே வலியுறுத்தி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வைத்திருப்பது பாராட்டுக்குரிய தொடக்கமாக உள்ளது.

பேட்டி

1. செல்வம் (பொதுமக்கள்)
2. அழகர்சாமி (விவசாயி திருநங்கை)
3. சங்கரேஸ்வரி (பொதுமக்கள்)Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.