விருதுநகர் மாவட்ட காவல் துறையினர் இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் நூதன முறையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த மாவட்டத்தை சுற்றிப் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவது குறித்த அவசியத்தை வலியுறுத்தி தலைக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே சாலையை கடக்க அனுமதிக்கின்றனர்.
மாவட்ட துணை கண்காணிப்பாளர் பிரசாத் தலைமையில் நடைபெறும் இந்த விழிப்புணர்வு முறையில் 32 காவலர்கள் மூலம் கல்லூரி சாலை, அல்லம்பட்டி ரோடு, கௌசிகா நதி பாலம் என எட்டு இடங்களில் வாகன சோதனைச்சாவடி அமைக்கப்பட்டு தலைக்கவசம் அணிவதற்கு வலியுறுத்தப்படுகிறது. இதன் மூலம் விபத்து தடுக்கப்படும் என்றும், பொதுமக்களும் பாதுகாப்பாக பயணம் செய்வார்கள் என்றும் காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதையும் படியுங்க:
'பசியாற சோறு அமைப்பின் விபத்தில்லா கோவை விழிப்புணர்வு'
ஹெல்மெட் கட்டாயம்: அரசு அலுவலர்களுக்கு எச்சரிக்கை விடுத்த உயர் நீதிமன்றம்!