விருதுநகர் மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக வெப்பச்சலனம் காரணமாக தொடர் மழையால் அருப்புக்கோட்டை பகுதியில் அதிக அளவில் மழைப்பொழிவு இருந்துவருகிறது. இந்நிலையில், அருப்புக்கோட்டை - தூத்துக்குடி சாலையில் உள்ள எம்.எஸ்.கார்னர் சந்திப்பில், பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவலர் செல்வகுமார் என்பவர் மழையால் வாகனங்கள் எதுவும் நெரிசலில் சிக்காமல் இருப்பதற்காக கடும் மழையையும் பொருட்படுத்தாமல் போக்குவரத்து பணியில் துரிதமாக ஈடுபட்டுவந்துள்ளார்.
எம்.எஸ்.கார்னர் சந்திப்பு என்பது அதிகமான வாகனங்கள் செல்லும் சாலைகளில் ஒன்றாகும். இப்பகுதியில், தொடர்ந்து வாகன நெருக்கடி இருந்து வரக்கூடிய நிலையில், மழையைக்கூட பொருட்படுத்தாமல் இவர் மேற்கொண்ட இந்த பணியை இப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். மேலும், இவர் பணியில் ஈடுபட்டிருந்த வீடியோவை அப்பகுதி இளைஞர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க :
லாரியில் மோதவிருந்த சிறுவன்... கண நேரத்தில் காப்பாற்றிய காவலர் - திக்... திக்... காணொலி!