விருதுநகர் மாவட்டம் நாராயனகுடும்பன்பட்டியைச் சேர்ந்த சின்னமாரிமுத்து (45) என்பவர் தனக்குச் சொந்தமான டிராக்டரில், கால்நடைகளுக்குத் தேவையான தீவனங்களை ஏற்றிச் சென்றுகொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே சென்ற மின்சார கம்பியில் உராய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் நாற்றுக் கட்டுகளில் தீடிரென்று தீப்பிடித்து எரிந்தது.
இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் தீயணைப்புத் துறையினர், தீப்பிடித்து எரிந்த டிராக்டரில், தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அனைத்தனர். இச்சம்பவம் நடந்த இடத்தின் அருகிலேயே, சமையல் எரிவாயு சிலிண்டர்களை சேமித்து வைக்கும், சேமிப்புக் கிடங்கு உள்ளது.
தீயணைப்புத் துறையினர் விரைந்து செயல்பட்டதால், அப்பகுதியில் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. தீ விபத்து தொடர்பாக அம்மாபட்டி காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தொழிற்சாலையில் தீ விபத்து - ஒரு லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்