விருதுநகரில் தனியார் தொண்டு நிறுவனம் சார்பாக நீரை சிக்கனமாக பயன்படுத்த, நீரை சேமிக்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவ மாணவிகளுக்கான மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
இதில் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர். மூன்று கிலோ மீட்டர் தொலைவு கொண்ட இந்த மினி மராத்தான் போட்டி விருதுநகர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தொடங்கி நகராட்சி பூங்கா ராமமூர்த்தி சாலை வழியாக சென்று அரசு மருத்துவமனை அருகே நிறைவடைந்தது. மாரத்தானில் முதலிடம் பிடித்தவர்களுக்கு ரூ.2,000 ரொக்கப் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது.