விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சி, 36 வார்டுகளை உள்ளடக்கியது. இதில் 24, 25 ஆகிய வார்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் நகராட்சி மூலம் வழங்கப்படும் தாமிரபரணி குடிநீர் 20 நாட்களுக்கு ஒருமுறை வழங்கப்பட்டது வந்தது.
ஆனால், கடந்த 30 நாட்களுக்கும் மேலாக தாமிரபரணி குடிநீர் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதனால் அப்பகுதிமக்கள் குடிதண்ணீர் இல்லாமல் பெரிதும் சிரமப்பட்டு விலை கொடுத்து வாங்கிவந்தனர். குடிநீர் வழங்கப்படவில்லை என பலமுறை நகராட்சி ஆணையரிடம் முறையிட்டும் இதுவரை தண்ணீர் வழங்கப்படாத நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடங்களுடன் விருதுநகர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த அருப்புக்கோட்டை நகர காவல் துறையினர் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, தண்ணீர் வழங்க நடைவடிக்கை எடுகப்படும் என உறுதியளித்த பின்பு மறியலை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இதனால் அருப்புக்கோட்டை விருதுநகர் சாலையில் ஒருமணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.