ETV Bharat / state

'சதுரகிரியில் தண்ணீருக்கு பணம் வாங்குவதில்லை' - வனத்துறை மறுப்பு

விருதுநகர்: சதுரகிரி கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் வழங்கும் தண்ணீருக்கு பணம் வசூலிக்கப்படுவதில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வனத்துறை அளித்துள்ள பதில், சந்தேகம் எழுப்பும்படி இருப்பதாக சமூக ஆர்வலர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சதுரகிரியில் தண்ணீருக்கு பணம் வாங்குவதில்லை
author img

By

Published : Jun 7, 2019, 7:27 PM IST

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில், தரையில் இருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது. இந்த கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

குறிப்பாக மாதந்தோறும் வரும் அமாவசை, பௌர்ணமியை தினங்களை முன்னிட்டு 8 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும். இந்த கோயிலுக்கு வரும் பக்தர்கள் கோயிலில் குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதிகளும் இல்லை என குற்றம் சாட்டியிருந்தனர்.

இந்நிலையில் கூமாபட்டி கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞரும், சமூக ஆர்வலருமான ராஜ்குமார் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் குடிநீருக்காக ரூ.5 வசூலிக்கப்படுவதன் நோக்கம் என்ன என்று மாவட்ட வனத்துறையிடம் விளக்கம் கேட்டிருந்தார். அதற்கு வனத்துறை சார்பில் குடிநீருக்காக பக்தர்களிடம் பணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை என பதில் அளித்தனர். இது பக்தர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சதுரகிரியில் தண்ணீருக்கு பணம் வாங்குவதில்லை

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பணம் வாங்கவில்லை எனக் கூறிவிட்டு, பக்தர்களிடம் வாங்கும் பணம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

விருதுநகர்
07-06-19

சதுரகிரி கோயிலில் முறையான விசாரணை நடத்த வேண்டும் - சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் தற்போது வரை பக்தர்களிடம் 5 ரூபாய் வசூலிக்கப்படும் நிலையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் பணம் வசூலிக்கப்படவில்லை என வனத்துறை பதிலால் சர்ச்சை...மேலும் கோயிலில் ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்லாத நிலையில் 25 லட்சம் வரை குடிநீருக்காக செலவு செய்துள்ளதாகவும் வனத்துறை தகவல்..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் தரைமட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் உள்ளது.இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின்  பல்வேறு பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனனர். மாதந்தோறும் அமாவசை மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு 8 நாட்கள் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு குடிநீர் உள்ளிட்ட எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லை என தொடந்து குற்றச்சாட்டு எழுந்து வண்ணம்  உள்ளது.

இந்நிலையில் கூமாபட்டியை  சார்ந்த வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான ராஜ்குமார் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கோயிலுக்கு செல்லும் நுழைவு வாயிலில் பக்தர்களிடம் 5 ரூபாய் பணம் எதற்காக வசூலிக்கபடுகிறது என மாவட்ட வனத்துறை அலுவலகத்திற்கு கேள்வி கேட்டிருந்த நிலையில் வனத்துறை சார்பில் பணம் ஏதும் வசூலிக்க்படவில்லை என பதில் அனுப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்பட்டுள்ளது. 5 ரூபாய் வீதம் ஆயிரக்கணக்கான பக்தர்களிடம் வசூலிக்கப்பட்ட லட்சக்கணக்கான ரூபாய் பணம் எங்கே செல்கிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் குடிநீருக்காக 25 லட்சம் வரை செலவு செய்துள்ளதாக் வனத்துறை தெரிவித்துள்ள நிலையில் தற்போது பக்தர்கள் குடிக்க ஒரு சொட்டு கூட தண்ணீர் இல்லை என்ற நிலையே உள்ளது.

இப்படி பல்வேறு ஊழல் நடைபெறும் சதுரகிரி கோயிலில் முறையான விசாரணை நடத்தி பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் சமூக ஆர்வலர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

TN_VNR_2_7_SATHURA_KIRI_MOUNTAIN_VISUAL_7204885

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.