விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரம் அருகே உள்ள ஒண்டிப்புலி நாயக்கனூரைச் சேர்ந்த திருமூர்த்தி என்பவரின் மகன் ருத்ரன்(3).
இன்று காலை அதே ஊரில் உள்ள தாத்தா வீட்டிற்குச் சென்ற குழந்தை வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் குழந்தையைக் காணாமல் குடும்பத்தினர் வீட்டைச் சுற்றி தேடினர். அப்பொழுது வீட்டின் அருகே உள்ள சுமார் நான்கடி ஆழம் கொண்ட மழைநீர் சேகரிப்புத் தொட்டிக்குள் குழந்தை விழுந்து கிடந்தது தெரியவந்தது.
உடனடியாக குழந்தையை மீட்ட குடும்பத்தினர் அதனை அம்மாபட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அது முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சம்பவம் குறித்து ஆமத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:
விருதுநகரில் குடிபோதையில் தெப்பக்குளத்தில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு