ETV Bharat / state

தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை செய்த 3 பேர் கைது! - Three arrested for selling banned online lottery

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் தடைசெய்யப்பட்ட இணைய லாட்டரி சீட்டு விற்பனை செய்த மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

online lottery virdhunagar, Three arrested for selling banned online lottery, விருதுநகர் ஆன்லைன் லாட்டரி விற்பனை
Three arrested for selling banned online lottery
author img

By

Published : Dec 16, 2019, 4:47 PM IST

விழுப்புரத்தில் தடைசெய்யப்பட்ட இணைய லாட்டரி மோகத்தால் கடனாளியான நகைத்தொழிலாளி அருண் தன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் தடைசெய்யப்பட்ட இணைய லாட்டரி சீட்டு விற்பனை செய்பவர்களை காவல்துறையினர் தேடிப்பிடித்து கைதுசெய்து வருகின்றனர்.

இச்சூழலில் அருப்புக்கோட்டையில் தடைசெய்யப்பட்ட இணைய வழி லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததது. தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இணைய லாட்டரி விற்பனை செய்ததாக வேல்முருகன் காலணியைச் சேர்ந்த சக்திவேல், நாகலிங்க நகரைச் சேர்ந்த சிவசங்கரன், நெசவாளர் நகரைச் சேர்ந்த கருப்பசாமி ஆகிய மூவரை கைது செய்தனர்.

3 பெண் குழந்தைகளைக் கொன்றுவிட்டு பெற்றோர் தற்கொலை: பணத்தாசையால் நேர்ந்த கொடூரம்!

விசாரணையில் மூவரும் கைப்பேசி மூலம் கேரள மாநில லாட்டரி சீட்டுகளை இணையத்தில் விற்பனை செய்தது தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்த அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் மூவரிடமிருந்து கைபேசிகளையும், ரூபாய் ஒரு லட்சம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

Intro:விருதுநகா்
16-12-19

தடைசெய்யப்பட்ட ஆன் லைன் லாட்டரி விற்பணை செய்த 3 பேர் கைது

Tn_vnr_01_online_lottery_photo_script_7204885Body:அருப்புக்கோட்டையில் தடைசெய்யப்பட்ட ஆன் லைன் லாட்டரி விற்பணை செய்த மூன்று நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

விழுப்புரத்தில் தடைசெய்யப்பட்ட மூன்று நம்பர் ஆன்லைன் லாட்டரி மோகத்தால் கடனாளியான நகைத் தொழிலாளி அருண் தன் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தடைசெய்யப்பட்ட ஆன் லைன் லாட்டரி விற்பனை செய்பவர்களை காவல்துறையினர் தேடிப்பிடித்து கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் அருப்புக்கோட்டையில் தடைசெய்யப்பட்ட ஆன் லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததது. தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் ஆன்லைன்லாட்டரி விற்பனை செய்ததாக வேல்முருகன் காலணியை சேர்ந்த சக்திவேல் மற்றும் நாகலிங்க நகரை சேர்ந்த சிவசங்கரன், நெசவாளர் நகரை சேர்ந்த கருப்பசாமி ஆகிய மூவரை கைது செய்தனர்,
விசாரணையில் மூவரும் மொபைல் போன் மூலம் கேரள மாநில லாட்டரிகளை ஆன்லைனில் விற்பணை செய்தது தெரியவந்தது. வழக்கு பதிவு செய்த அருப்புக்கோட்டை நகர் காவல்துறையினர் மூவரையும் கைது செய்தனர். கைது செய்யபப்பட்டவர்களிடம் இருந்து மொபைல்போனையும் ரூ1 லட்சம் ரொக்கப்பணத்தையும் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.