ETV Bharat / state

திருவள்ளுவருக்கு கோயில் கட்டி வழிபடும் கிராம மக்கள்!

விருதுநகர்: புதுப்பட்டி கிராம மக்கள் திருவள்ளுவருக்கு திருக்கோயில் கட்டி சிறப்பாக வழிபாடு நடத்தி வருகின்றனர்.

thiruvalluvar temple
author img

By

Published : Nov 6, 2019, 4:56 PM IST

விருதுநகர் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தினர் உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலகுக்கு தந்து வாழ்வியல் நெறிகளை வகுத்துக் கொடுத்த வள்ளுவருக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தி வருகிறார்கள்.

செம்மொழியான தமிழுக்கு மேலும் புகழ் சேர்ப்பது உலகப் பொதுமறையான திருக்குறள். தமிழில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் வாழ்க்கைக்கான அனைத்து தத்துவங்களையும், கோட்பாடுகளையும் தன்னுள் கொண்டுள்ளதால் சீன மொழி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

மக்கள், அரசன், ஆசிரியர், கணவன், மனைவி, குழந்தை என ஒவ்வொருவருக்கும் தனித்தனி அதிகாரங்களாகப் 133 பிரிவுகளாக பிரித்து வாழ்க்கை நெறியை வகுத்துக் கொடுத்துள்ள திருவள்ளுவருக்கு விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள பி.புதுப்பட்டியில் கடந்த 1929-இல் திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது.

விருதுநகர் புதுப்பட்டியில் அமைந்துள்ள திருவள்ளுவர் கோவில்

இங்கு, இன்றுவரை சிறப்பாக வழிபாடு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் திருவள்ளுவர் குறித்த பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள சூழ்நிலையில் இதுபோன்ற கோயில்கள் பொதுமக்களிடையே மிகுந்த வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:

குழந்தையின் உயிரிழப்புக்கு நீதி கேட்டும் பெற்றோர்!

Intro:விருதுநகர்
06-11-19

திருவள்ளுவருக்கு கோயில் கட்டி வழிபடும் கிராம மக்கள்

Tn_vnr_03_thiruvalluvar_temple_vis_script_7204885Body:திருவள்ளுவருக்கு திருக்கோயில் கட்டி வழிபடும் விருதுநகர் புதுப்பட்டி கிராம மக்கள்

உலகப் பொதுமறையாம் திருக்குறளை உலகுக்கு தந்து வாழ்வியல் நெறிகளை வகுத்துக் கொடுத்த வள்ளுவருக்கு கோயில் கட்டி வழிபாடு நடத்தி வருகிறார்கள் விருதுநகர் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்தினர். செம்மொழியான தமிழுக்கு மேலும் புகழ் சேர்ப்பது உலகப் பொதுமறையான திருக்குறள். தமிழில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் வாழ்க்கைக்கான அனைத்து தத்துவங்களையும் கோட்பாடுகளையும் தன்னுள் கொண்டுள்ளதால் சீன மொழி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. மக்கள், அரசன், ஆசிரியர், கணவன், மனைவி, குழந்தை என ஒவ்வொருவருக்கும் தனித்தனி அதிகாரங்களாகப் 133 பிரிவுகளாக பிரித்து வாழ்க்கை நெறியை வகுத்துக் கொடுத்துள்ள திருவள்ளுவருக்கு விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள பி.புதுப்பட்டியில் கடந்த 1929-ல் திருக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு, இன்றுவரை சிறப்பாக வழிபாடு செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
திருவள்ளுவர் வழித்தோன்றல்களால் இத்திருக்கோயில் கட்டப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட சமுதாய மக்கள் மட்டுமின்றி கிராம மக்கள் அனைவரும் இக்கோவிலில் வழிபாடு நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் திருவள்ளுவர் குறித்த பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள சூழ்நிலையில் இதுபோன்ற கோயில்கள் பொதுமக்களிடையே மிகுந்த வியப்பை ஏற்படுத்தியுள்ளது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.