விருதுநகர் பர்மா காலனியில் டெல்லி சென்று வந்த சக்ரியா என்பவர் கரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் அவருடன் தொடர்பிலிருந்த பர்மா காலனியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோரை சுகாதாரத் துறை அலுவலர்கள் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தி கண்காணித்து வருகின்றனர்.
அதே பகுதியில் பிரியாணி கடை நடத்தி வந்தவர் அப்துல் கனி (30). இவருக்கு திடீரென நேற்றிரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அங்கு அவருக்கு சிகிச்சையளிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அவரை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இவர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக எண்ணி விருதுநகர் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இதனை, மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்தி பொதுமக்களிடையே எழுந்துள்ள அச்சத்தைப் போக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: 'மோடி ஐயா, மோடி ஐயா சோறு போடய்யா' - குழந்தைகளின் குரல்களுக்கு செவிசாய்ப்பாரா பிரதமர்?