விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், வெம்பக்கோட்டை ஆகிய ஒன்றியங்களில் உள்ள 35 கிராமங்களில் ஃபிரிடம் பண்ட் (freedom fund) அமைப்பின் நிதி உதவியுடன் செயல்பட்டுவரும் வான்முகில் தொண்டு நிறுவனம் கடந்த ஆண்டு 2000 குடும்பங்களுக்கு ரூ.1000 மதிப்பிலான அரிசி, காய்கறிகள், மளிகைப்பொருள்கள் உள்ளிட்டவை அடங்கிய நிவாரணப் பொருள்கள் கரோனா கால பேரிடரால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் மற்றும் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டன.
வான்முகில் தொண்டு நிறுவனம்
அதேபோல் நான்காம் கட்டமாக வான்முகில் தொண்டு நிறுவனம் இன்றைய வெம்பக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் உள்ள 450 குடும்பங்களுக்கு கரோனா கால ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்கள் மற்றும் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1000 மதிக்கத்தக்க உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.