கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுக்க ஒரு நாள் சுய ஊரடங்குக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
அதன்படி இன்று(மார்ச்22) ஒருநாள் சுய ஊரடங்கு மக்களால் கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் நாட்டின் முக்கிய நகரங்கள் ஆள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
தமிழ்நாட்டின் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களும் வெறிச்சோடியது. விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை முக்கிய பகுதிகள் முடங்கின. பிரதான சாலைகளும் வாகன போக்குவரத்து இன்றி காணப்பட்டது.
இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மருத்துவமனை எதிரே ஒரே ஒரு தேநீர் கடை மட்டும் இயங்கியது. இந்தக் கடையில் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தேநீர் அருந்தி பசியை போக்கிக்கொண்டனர்.
முன்னதாக நாடு முழுக்க மக்கள் ஊரடங்கு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அது அதிகாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சுவாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப்பதி நடைதிறப்பு!