விருதுநகரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 100 நாள் வேலைத் தொழிலாளர்களுக்கு ஊதியமாக வரவேண்டிய, பல்லாயிரம் கோடி ரூபாய் வருவாயில் ஊழல் நடைபெற்றதைக் கண்டித்து, இக்கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் முக்கியக் கோரிக்கையாக 100 நாள் வேலைத் திட்டத்தை 250 நாளாக உயர்த்த வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப தினக்கூலி 600 ரூபாய் வழங்க வேண்டும், அரசு அறிவிக்கப்பட்ட சட்டக்கூலி 229 ரூபாயை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. விவசாயத் தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ’நூறு நாள் வேலை திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும்’