ETV Bharat / state

திருட வந்தபோது போதையில் தூங்கியதால் காவலரிடம் சிக்கிய திருடன்! - திருட வந்த இடத்தில் தூங்கிய திருடன்ட

விருதுநகர்: பெருமாள் கோயிலில் திருட வந்த ஒருவர் போதையில் தூங்கியதால் காவல் துறையிடம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருட வந்த போது போதையில் தூங்கியதால் போலிஸிடம் சிக்கிய திருடன்!
திருட வந்த போது போதையில் தூங்கியதால் போலிஸிடம் சிக்கிய திருடன்!
author img

By

Published : Dec 6, 2019, 10:41 PM IST

விருதுநகர் மாவட்டம் ஆர்.ஆர். நகர் பகுதியில் டிசம்பர் 4ஆம் தேதி காலை 4.30 மணிக்கு சார்பு ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் 6-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள பெருமாள் கோயில் வளாகத்தில் ஒருவர் போதையில் கிடந்துள்ளார். போதையில் இருந்தவரிடம் இரும்பு கம்பி, டார்ச் லைட் இருப்பதைக் கண்ட காவல் துறையினர் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

பெருமாள் கோயிலில் புகுந்த திருடன்

விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தத்தனேரி காலனி பகுதியைச் சேர்ந்த செந்தூர் என்ற செந்தூர்பாண்டி (55) கட்டட தொழில் செய்துவருவது தெரியவந்தது.

இவருக்கு கட்டட தொழிலில் போதிய வருமானம் கிடைக்காத கரணத்தால் திருட முடிவு செய்துள்ளார். வீடுகளுக்குச் சென்று கைவரிசை காட்டாமல், கோயில்களை நோட்டமிட்டு திருடி வந்துள்ளார். 2001ஆம் ஆண்டு முதல் திருடி வந்துள்ளதாக காவல் துறையிடம் தெரிவித்துள்ளார். திருட நினைக்கும் கோயிலில் பகலில் சென்று நோட்டமிட்டு, இரவில் புகுந்து பொருள்களையும், நகை, பணத்தையும் அள்ளிச் செல்வது இவரது வாடிக்கையாக இருந்துவந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு புலிகுத்தி கிராமத்தில் உள்ள சிவன்கோயில் உண்டியல் திருடுபோனது. அந்தக் கொள்ளையில் செந்தூர்பாண்டிதான் ஈடுபட்டது காவல்துறை விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில் செந்தூர்பாண்டிக்கு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்க ஆசை வந்துள்ளதாம். இதனால், ஆர்.ஆர். நகர் பகுதியில் உள்ள கோயில்களை நோட்டமிட்டுள்ளார்.

பெருமாள் கோயிலில் இரவில் புகுந்து திருட திட்டமிட்டவர், கோயில் வளாகத்திலேயே போதையில் உறங்கிவிட்டதால், ரோந்து சென்ற காவல் துறையினரிடம் சிக்கிக்கொண்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த வச்சக்காரப்பட்டி காவல் துறையினர், செந்தூர்பாண்டியை கைது செய்து அவரிடமிருந்து ஒரு லட்சத்து 18 ஆயிரம் ரூபாய் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

இதையும் படிங்க: 'பயங்கர ஆயுதங்களுடன் உலாவரும் சந்தனமர கடத்தல் கும்பல்' - சிசிடிவி காட்சி வெளியீடு!

Intro:விருதுநகர்
06-12-19

திருட வந்த போது போதையில் தூங்கியதால் போலிஸிடம் சிக்கிய திருடன்

Tn_vnr_02_temple_theft_accuesd_arrest_vis_script_7204885Body:விருதுநகா் அருகே கோவிலில் திருட வந்த போது போதையில் தூங்கியதால் போலிஸிடம் சிக்கிய திருடன்

விருதுநகர் அருகே ஆர்.ஆர்.நகர் பகுதியில் வச்சக்காரப்பட்டி போலீசார் கடந்த 4ம் தேதி காலை 4.30 மணிக்கு சார்பு ஆய்வாளர் ரமேஷ் தலைமையில் 6 க்கும் மேற்ப்பட்ட போலீசார் ரோந்து பணிக்குச் சென்றனர். அப்போது அங்குள்ள பெருமாள் கோவில் வளாகத்தில் ஒருவர் போதையில் கிடந்து உள்ளார் அவர் அருகே இரும்பு கம்பி, டார்ச் லைட் கிடந்து உள்ளது இதையடுத்து போலீசார் அவரை போதையை தெளிய வைத்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தத்தனேரி காலனி பகுதியை சேர்ந்த செந்தூர் என்ற செந்தூர்பாண்டி (வயது55) என்பதும் கட்டிட தொழிலாளி எனவும் தெரியவந்தது. மேலும் இவருக்கு கட்டிட தொழிலில் போதிய வருமானம் கிடைக்காத கரணத்தால் திருட முடிவு செய்துள்ளார். வீடுகளுக்குச் சென்று கைவரிசை காட்டாமல், கோவில்களை நோட்டமிட்டு திருடி வந்துள்ளார். அதுவும் கடந்த 2001-ம் ஆண்டு முதல் திருடி வந்துள்ளதாக போலீசில் தெரிவித்துள்ளார்.
திருட நினைக்கும் கோவிலில் பகலில் சென்று நோட்டமிட்டு, இரவில் புகுந்து பொருட்களையும், நகை, பணத்தையும் அள்ளிச் செல்வது இவரது வாடிக்கையாக இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு புலிகுத்தி கிராமத்தில் உள்ள சிவன்கோவில் உண்டியல் திருட்டு போனது அந்த கொள்ளையில் செந்தூர்பாண்டி தான் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இந்த நிலையில் செந்தூர் பாண்டிக்கு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்க ஆசை வந்துள்ளது இதற்காக ஆர்.ஆர்.நகர் பகுதியில் உள்ள கோவில்களை நோட்டமிட்டுள்ளார்.
பெருமாள் கோவிலில் இரவில் புகுந்து திருட திட்டமிட்ட அவர், அதற்கு முன்னதாக மது குடித்துள்ளார். அப்படியே கோவிலுக்கு வந்த செந்தூர் பாண்டி, கோவில் வளாகத்திலேயே போதையில் உறங்கிவிட்டதால், ரோந்து சென்ற போலீசாரிடம் சிக்கிக்கொண்டார்.
இதையடுத்து வச்சக்காரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தூர்பாண்டியை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.1 லட்சத்து 18 ஆயிரம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.