தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற்றது. 2019 ஜனவரி இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை தொடங்கி நான்காம் தேதி முடிந்தது. இந்நிலையில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஒருவர் தாம் தோல்வியடைந்ததையடுத்து தன்னை தோல்வியடையச் செய்ததற்கு நன்றி என சுவரொட்டி அடித்து ஒட்டியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திக்குளம் - செங்குளம் ஊராட்சி உள்ளது. இங்கு தலைவர் பதவிக்கு போட்டியிட்ட காசி என்பவர் தோல்வியடைந்தார். இதையடுத்து 'என்னை தோல்வியடைய செய்த வாக்காளர்களுக்கு நன்றி. நான் உங்களை நம்பினேன், நீங்கள் இப்படி துரோகம் செய்வீர்கள் என கனவில்கூட நினைக்கவில்லை' என தனது ஆதங்கத்தை சுவரொட்டி ஒட்டி வெளிப்படுத்தியுள்ளார்.
இதேபோன்று அத்திகுளம் - தெய்வேந்திரி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பிரதிவிராஜன் என்பவர் தோல்வியடைந்த நிலையில், 'பணம் வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தவர்களுக்கு வாக்களித்த அனைத்து நல்உள்ளங்களுக்கு மனமார்ந்த நன்றி' என ஃபிளக்ஸ் அடித்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கோவையில் களைகட்டிய ரேக்ளா பந்தயம் - பொதுமக்கள் கண்டுகளிப்பு