ETV Bharat / state

போலி என்கவுண்டர் செய்த 4 போலீசாரை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் போலி என்கவுண்டர் செய்த 4 போலீசாரை பணியிடை நீக்கம் செய்ய தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

என்கவுண்டர்
author img

By

Published : Mar 14, 2019, 7:54 PM IST

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தசுந்தரமூர்த்தி என்பவர் கடந்த 2009 ஜூலையில் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். போலி என்வுண்டரில் தனது கணவரை சுட்டுக் கொன்ற சிவகாசி காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், காவலர்கள் காமராஜ், சிவா, கருணாகரன் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சுந்தர மூர்த்தியின் மனைவி வசந்தி, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த ஆணைய நீதிபதி ஜெயசந்திரன், சுந்தரமூர்த்தி உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் அளித்த சாட்சியங்களை மேற்கோள் காட்டி, இது போலி என்கவுண்டர் எனக் கூறி தொடர்புடைய நான்கு போலீசாரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யவும், அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு பரிந்துரைத்தார்.

என்கவுண்டர்
enc

மேலும், பாதிக்கப்பட்ட சுந்தரமூர்த்தியின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த என்கவுண்டர் வழக்கை முறையாக விசாரிக்காத சிபிசிஐடி ஆய்வாளருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும்,காவல்துறை செயல்பாட்டால் நிகழும் மரணங்கள் தொடர்பாக உடனடியாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தவும் ஆணைய நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Intro:Body:

போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டவரின் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும், 4 காவல்துறை அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்யவும் தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த  சுந்தரமூர்த்தி என்பவர் கடந்த 2009 ஜூலையில் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.  போலி என்வுண்டரில் தனது கணவரை சுட்டுக் கொன்ற சிவகாசி காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், காவலர்கள் காமராஜ், சிவா, கருணாகரன் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சுந்தர மூர்த்தியின் மனைவி வசந்தி, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த ஆணைய நீதிபதி ஜெயசந்திரன்,  சுந்தரமூர்த்தி உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் அளித்த சாட்சியங்களை மேற்கோள் காட்டி, இது போலி என்கவுண்டர் எனக் கூறி, இதில் தொடர்புடைய நான்கு காவல் துறையினரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யவும், அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு பரிந்துரைத்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட சுந்தரமூர்த்தியின் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்ட மனித உரிமை ஆணையம்,  இந்த என்கவுண்டர் வழக்கை முறையாக விசாரிக்காத சிபிசிஐடி ஆய்வாளருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைத்துள்ளது.

காவல்துறை செயல்பாட்டால் நிகழும் மரணங்கள் தொடர்பாக உடனடியாக மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தவும் ஆணைய நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.