விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூரில் பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மத்திய அரசு ரஜினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்குவது சரியான ஒன்று. இந்த விருது அவரது நடிப்பு, நடவடிக்கை, யதார்த்தமான பேச்சிற்காக கிடைத்துள்ளது. இந்த விருதை ரஜினிக்கு மத்திய அரசு முன்னதாகவே கொடுத்திருக்கலாம்” என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், திமுக வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை சந்திக்க போகிறது என்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு முதலமைச்சர் ஆவதற்கான யோகமே இல்லை என்றும் அவர் கூறினார்.