உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்கத்தால் ஏராளமானோர் உயிரிழந்து வருகின்றனர். இந்தியாவிலும் கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அதை தடுக்கும் வண்ணம் தமிழ்நாட்டில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
குறிப்பாக பல்வேறு கோயில்களில் மருத்துவ சோதனைக்கு பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான மசூதிகள், கோயில்கள், தேவாலயங்கள் போன்ற இடங்களை தவிர்க்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிரசித்திப் பெற்ற ஆண்டாள் கோயிலில் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் பக்தர்கள் இன்றி கோயில் வெறிச்சோடி காணப்படுகிறது.
இதையும் படிங்க: முகக்கவசம், வென்ட்டிலேட்டர்கள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை