ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் சடகோப ராமனுஜ ஜீயர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அதில், “மார்கழி மாதம் வரப்போகிறது. டிசம்பர் 25 வைகுண்ட ஏகாதேசி வரப்போகிறது. இப்போது இருக்கக்கூடிய காலகட்டங்களில் அனைத்து கோயில்களிலும் காலை 4 மணியளவில் கோயில்களைத் திறந்து அந்தந்த கோயிலின் ஆகம விதிகளுக்கு ஏற்றபடி பூஜைகள் செய்து தீபாராதனை காட்டி, பக்தர்களுக்கு தீர்த்தமும் ஜடாரியும் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்.
கரோனாவைக் காரணம் காட்டி தீர்த்த பிரசாதம், ஜடாரியை பக்தர்களுக்கு வழங்குவதை கோயிலில் நிறுத்திவைத்துள்ளனர். தீர்த்த பிரசாதத்தில் பலவிதமான மூலிகைகள் இருக்கின்றன. வருகின்ற வைகுண்ட ஏகாதசிக்கு எந்தவித தடையும் இல்லாமல் பக்தர்கள் எளிய முறையில் பெருமாளை தரிசிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.